பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.. வெளியானது CBSE +2 தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் பார்ப்பது எப்படி..??
பொதுவாக, இந்தியாவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தேர்வுகள் ஆனது பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு CBSE தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் முறையே ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வுகளை 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகளை CBSE நிர்வாகம் மே 15 ஆம் தேதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
எனவே நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் “இன்று (13-05-2025) எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி CBSE +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும், cbseresults.nic.in, cbse.gov.in மற்றும் results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக தங்கள் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
























