
Today Gold Rate: தங்கம் வாங்கும் மக்களுக்கு ஓர் நற்செய்தி…!! நேற்றைய விலையிலேயே விற்பனை என தகவல்…!!
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியானது 6% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இதனால், தங்கத்தின் விலையானது குறையும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், நாளுக்கு நாள் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து, தற்போது சவரனுக்கு ரூ. 68,000 யை தொட்டுள்ளது. அந்தவகையில், இன்று (02.04.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
ரேஷன் கார்டு வச்சுருக்கீங்களா? உடனே இதை பாருங்க!
அதாவது, இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையானது, நேற்றைய விலையில் எந்தவித மாற்றமும் இன்றி 1 சவரன் ரூ. 68,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,14,000 ஆகவும், 1 கிராம் ரூ. 114 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

























