ரேஷன் கார்டு வச்சுருக்கீங்களா? உடனே இதை பாருங்க!

0

ரேஷன் கார்டு வச்சுருக்கீங்களா? உடனே இதை பாருங்க!

மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு.  எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள  மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாகும். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டில் கேஒய்சி சரிபார்ப்பு என்பது மிக முக்கியமான விதிமுறை ஆகும். ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் கேஒய்சி சரிபார்ப்பு செய்து கொள்வது அவசியம்.

விவசாயி அக்கவுண்டில் வரும் 2000 ரூபாய்.. எப்போது?

கேஒய்சி சரிபார்ப்பு என்பது மொபைல் நம்பர், ஆதார் கார்டு மற்றும் கைரேகை சரிபார்ப்பு அடங்கிய ஒரு செயல்முறையாகும். கேஒய்சி சரிபார்ப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் 85 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தற்போது நிவாரணம் கிடைத்துள்ளது. மத்திய அரசு கேஒய்சி சரிபார்ப்புக்கான காலக்கெடுவை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக, இதற்கான கடைசி தேதி மார்ச் 31 என நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!