விவசாயி அக்கவுண்டில் வரும் 2000 ரூபாய்.. எப்போது?
இந்தியாவில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புதிய திட்டமான பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் பிரதமரின் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான செயலில் இருந்து வருகிறது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணம் வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகின்றன.
CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?உடனே தெரிஞ்சுக்கோங்க!
பிஎம் கிசான் திட்டத்தின் 20ஆவது தவணை ஜூன் மாதத்தில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து வழக்கமாக ஜூன் மாதத்திலேயே தவணை வழங்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் 19 வது தவணை வழங்கப்பட்டு 4 மாதங்கள் ஆகின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இன்னும் வரவில்லை. எனவே விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.



























