CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?உடனே தெரிஞ்சுக்கோங்க!

0

CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?உடனே தெரிஞ்சுக்கோங்க!

சிபிஎஸ்இ கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாடு முழுவதும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டு வகுப்புகளுக்கும் தேசிய அளவில் பிப்ரவரி 15ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் 10ம் வகுப்புக்கு மார்ச் 18-ம் தேதியுடன் தேர்வு முடிவடைந்தது. 12-ம் வகுப்பிற்கு ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 24.12 லட்சம் மாணவர்களும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 17.88 லட்சம் மாணவர்களும் என மொத்தம் சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பணம் போடப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்ளோ வட்டி?

தேர்வு முடிவுகள் 40 முதல் 45 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வகையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் (CBSE Board Class 10th 12th Result 2025) வரும் மே மாதம் 20 தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வகுப்புகளுக்கும் ஒரே நாளில் முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை https://www.cbse.gov.in/ மற்றும் https://results.cbse.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் ரோல் எண், பள்ளி எண், அட்மிட் கார்டு எண் ஆகியவை உள்ளிட்ட முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!