ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பணம் போடப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்ளோ வட்டி?
அதிக அளவில் மக்கள் தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக நினைக்கின்றனர். சிலர் அதிக வட்டி எதிர்பார்க்கின்றனர். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயிக்கிறது. வங்கிகள் தங்களது திட்டங்களுக்கான கால அளவு முதல் சில வரைமுறைகளும் வகுத்துள்ளனர். இவற்றில் மக்களுக்கு எவை வசதியாக உள்ளதோ அவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி:
5 ஆண்டு FDகளில் அதிக வட்டியை வழங்கும் வங்கிகளின் பட்டியலில் உத்கர்ஷ் சிறு நிதி வங்கி 5வது இடத்தில் உள்ளது. உத்கர்ஷ் சிறு நிதி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டு FDகளில் 7.75 சதவீத வட்டியை வழங்குகிறது.
நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி
5 ஆண்டு FDகளில் அதிக வட்டியை வழங்கும் வங்கிகளின் பட்டியலில் நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி நான்காவது இடத்தில் உள்ளது. நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டு FDகளில் 8 சதவீத வட்டியை வழங்குகிறது.
யுபிஐ கணக்குகளில் முக்கிய மாற்றம்..! முழு விவரங்களுடன்!
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி:
5 ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியலில் யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி:
5 ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியலில் ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு 8.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி:
சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு 8.6% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது.



























