தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.18,000/- || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Mid Level Health Provider (MLHP) பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Mid Level Health Provider (MLHP) பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in GNM / B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IBPS ஆணையத்தில் B.E முடித்தவர்களுக்கான வேலை – ரூ.3,02,169/- சம்பளம் || உடனே விண்ணப்பியுங்கள்!
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.04.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்ப ட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























