சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்.. ஊட்டிக்கு செல்ல அனுமதி மறுப்பு.. கொந்தளித்த வியாபாரிகள்..

0
???????? ????????? ??????????? ??????? ???????.. ????????? ????? ?????? ???????.. ?????????? ???????????..
சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்.. ஊட்டிக்கு செல்ல அனுமதி மறுப்பு.. கொந்தளித்த வியாபாரிகள்..

சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்..!! ஊட்டிக்கு செல்ல அனுமதி மறுப்பு..?? கொந்தளித்த வியாபாரிகள்..

 

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஊட்டி, கொடைக்கான போன்ற சுற்றுலா தலங்களில் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படைகிறது. எனவே “ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை சரிவர நிர்வகிக்க ஏப்ரல் 1 முதல் ஜூன் 30,2025 ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது”.

தமிழ்நாட்டில் இன்று (ஏப்.1) முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள் – முழு விவரங்களுடன்!

அதன்படி நேற்று (01-04-2025) இந்த விதியானது நடைமுறைக்கு வந்தது. மேலும், “தமிழகம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு, கோத்தகிரி வழிகளும் மற்றும் கேரளா, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள கூடலூர் நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்டவயல், நம்பியார் குன்னு, கக்கநல்லா ஆகிய சோதனை சாவடிகளிலும் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது”. இதை தொடர்ந்து, இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், ஊட்டிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த வியாபாரிகள் “இ-பாஸ் நடைமுறையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என கோரி இன்று (02-04-2025) 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்”.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!