
இனி மாதந்தோறும் செலுத்தப்படும் மின் கட்டணத்திற்கு குட்பை..!! மத்திய அரசு வழங்கும் இலவச மின்சாரம்..!! பயன்பெற இதை செய்யுங்க..
மின்சாரம் என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு பகுதியாக திகழ்கிறது. மேலும், வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் மின்சாரம் பயன்பாடு மிக அவசியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் சிலர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், சோலார் பேனல்கள் பயன்படுத்தி அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சோலார் பேனல்கள் பயன்பாடு குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, சாமானிய மக்கள் ஒவ்வொருவரும் மாதந்தோறும் மின்சாரக் கட்டணமாகப் பெரிய தொகை செலுத்தி வருகின்றனர். இதை நிவர்த்தி செய்ய “மோடி அரசால் பிஎம் சூரிய கர் முஃபத் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களின் வீட்டின் கூரையில் சோலார் பேனல் நிறுவப்படும். இவ்வாறு நிறுவப்படும் சோலார் பேனல்களுக்கு அரசு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 1 கோடி குடும்பங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க உள்ளோம் என்றும், 2026-27 ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தில் ரூ.75,021 கோடி முதலீடு செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்”.


























