
இனி வங்கிகளில் தங்க நகைக்கடனுக்கு நியூ ரூல்ஸ்…ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகளால் யாருக்கு லாபம்…?
சாமானிய மக்கள் வட்டிக்கு பணம் வாங்கி தவிப்பதை தவிர்க்க, தங்க நகைகளை அடகு வைத்து அவசர செலவுகளை சமாளித்து வருகின்றனர். ஆனால், ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்த புதிய விதிகள், ஏழை மக்களின் தலையில் இடியாக வந்து விழுந்ததைப் போல சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நகை கடன் பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காலக்கெடு முடியும் போது, வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
மேலும், மறுஅடகு வைக்க வேண்டும் என்றால், நகையை திருப்பிய அடுத்த நாளே வைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, இந்த புதிய விதிகளால் மக்கள் நகையை திருப்புவதற்கே மறுபடியும் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும் என்று மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால், தனியார் நிதி நிறுவனங்களுக்கே லாபம் என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், கடன் பெற்றவர்களின் நஷ்டத்தை குறைப்பதற்கே இதுபோன்ற புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடைமுறைக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இதனை புதுப்பிக்குமாறு வங்கி ஊழியர்கள் ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

























