நீண்ட காலத்திற்கு பின் கையெழுத்தான இந்தியா – பிரிட்டன் ஒப்பந்தம்.. பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல் ..!!  

0
????? ??????????? ???? ??????????? ??????? - ????????? ?????????.. ??????? ????????? ??????? ????? ..!!
நீண்ட காலத்திற்கு பின் கையெழுத்தான இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம்.. பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல் ..!!

நீண்ட காலத்திற்கு பின் கையெழுத்தான இந்தியா – பிரிட்டன் ஒப்பந்தம்.. பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல் ..!!  

கடந்த 3 ஆண்டுகளாக பிரிட்டனுக்கும் இந்தியாவிற்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று (07-05-2025) ஒப்பந்தம் கையெழுத்தானதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தமாகும். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஏற்றுமதி மற்றும்  இறக்குமதி எளிமையானதாக மாறும் எனவும், பொருளாதார ரீதியாக இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மாணவர்கள் கவனத்திற்கு.. தமிழக கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது..!!

இது குறித்து பிரதமர் தனது X தளத்தில் கூறியது, “இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மருடன் இன்று நான் பேசியது மிகுந்த மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாகும். இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு நாடுகளுக்கும் பயனளிக்கும், தீவிரமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. இந்த வரலாற்று ஒப்பந்தங்கள், நமது விரிவான வணிக துறைகளை மேலும் வலுப்படுத்தும் எனவும், இதனால் இரு நாடுகளிலும் வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!