IPL 2025: கட்டாய வெற்றியை நோக்கி கொல்கத்தா அணி.. சென்னையுடன் இன்று பலப்பரீட்சை..!!

0
IPL 2025: ?????? ???????? ?????? ????????? ???.. ??????????? ????? ???????????..!!
IPL 2025: கட்டாய வெற்றியை நோக்கி கொல்கத்தா அணி.. சென்னையுடன் இன்று பலப்பரீட்சை..!!

IPL 2025: கட்டாய வெற்றியை நோக்கி கொல்கத்தா அணி.. சென்னையுடன் இன்று பலப்பரீட்சை..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரித்தால் (BCCI) ஆண்டுதோறும் 10 அணிகள் இடையே நடத்தப்படும் IPL போட்டியின் 18 வது பதிப்பானது தற்போது பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

நீண்ட காலத்திற்கு பின் கையெழுத்தான இந்தியா – பிரிட்டன் ஒப்பந்தம்.. பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல் ..!!  

 

இந்நிலையில், “இன்று (07-05-2025) கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் 57 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன”. மேலும், நடப்பாண்டில் 11 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 5 வெற்றி, 6 தோல்வி என சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதை தொடர்ந்து, சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக வெறும் 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தடுமாறி வருகிறது. இந்நிலையில் “கொல்கத்தா அணி அடுத்து விளையாடவிருக்கும் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். மேலும், கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 103 ரன்னில், 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி தக்க பதிலடி கொடுக்கும்” என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!