
“ஆப்ரேஷன் சிந்தூர்” நிகழ்த்தப்பட்டது ஏன்…? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை செயலாளர்…!! இனி நடக்கப்போவது என்ன ?
காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் நடந்த எல்லை தாண்டிய தீவிரவாத சம்பவத்திற்கு பதிலடி தரும் விதமாக, நேற்றிரவு இந்திய இராணுவம் “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் உள்ள 9 இடங்கள் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தகர்க்கப்பட்டன. தற்போது, இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், வரலாற்றில் முதன் முறையாக இந்த இராணுவ செய்தியாளர்கள் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமெண்டர் வியோமிகா சிங் என்ற இரு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கமளித்துள்ளனர்.
மேலும், நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர், “பகல்ஹாம் தாக்குதலில் ஈடுப்பட்டவர்கள் பாகிஸ்தானில் உள்ளவர்களை தொடர்பு கொண்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாக” தெரிவித்தார். அத்துடன், “பகல்ஹாம் தாக்குதல் நடந்து 15 நாட்கள் ஆகியும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனவும், “தீவிரவாதிகளை தண்டிப்பதற்காகவே இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது, தீவிரவாத முகாம்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன” என்றும், “மோதலை அதிகப்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.
IPL 2025: கட்டாய வெற்றியை நோக்கி கொல்கத்தா அணி.. சென்னையுடன் இன்று பலப்பரீட்சை..!!
மேலும் பேசிய அவர், “பகல்ஹாம் தாக்குதலுக்கு ‘Resistence Front’ என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது லஷ்கர்-இ- தொய்பா அமைப்புடன் தொடர்புடையது. இதன் அடிப்படையில், பாகிஸ்தானுக்கும் இதில் உள்ள தொடர்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன” எனவும், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய, விங் கமெண்டர் வியோமிகா சிங் “பாகிஸ்தானில் எந்தவொரு தாக்குதலையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது” என்று தெரிவித்தார். அதன்பின் பேசிய கர்னல் சோபியா குரேஷி, “ஆபரேஷன் சிந்தூர் நேற்று நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 தீவிரவாத முகாம்கள் குறி வைத்து தகர்க்கப்பட்டன. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலே இந்த முகாம்கள் கண்டறியப்பட்டன” என தெரிவித்தார்.


























