மாணவர்கள் கவனத்திற்கு.. தமிழக கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது..!!

0
????????? ???????????.. ????? ???????????? ??????????? ???????? ????? ????? ??????????..!!
மாணவர்கள் கவனத்திற்கு.. தமிழக கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது..!!

மாணவர்கள் கவனத்திற்கு.. தமிழக கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது..!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்கான முடிவுகள் நாளை (08-05-2025) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு இன்று மே 7 ஆம் தேதி தொடங்குகிறது என்று தகவல் வெளியானது.
அதன்படி “இன்று (07-05-2025) சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகிய 3 முக்கிய கல்விப் பிரிவுகளுக்கான விண்ணப்பப் பதிவு இணையதளங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்”. மேலும், பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் “www.tneaonline.org” என்ற இணையதளம் வழியாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் “www.tngasa.com” என்ற இணையதளம் வழியாகவும், இறுதியாக பாலிடெக்னிக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் “www.tnpoly.in” என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!