
நாடு முழுவதும் நடைபெறவுள்ள பாதுகாப்பு ஒத்திகை…!! விடுமுறை அறிவித்த ஐ.டி நிறுவனங்கள்…!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்…!!
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் பரிதமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இரு நாடுகளிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், பகல்ஹாம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் கூறி இருந்த நிலையில், நேற்றிரவு “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் உள்ள 9 முகாம்கள் மீது ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.இதனால், முன்பிருந்ததை விட தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்.. ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாம்கள்..!!
இந்நிலையில், மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 244 சிவில் மாவட்டங்கள் தேர்தெடுக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த “பாதுகாப்பு ஒத்திகை” நடைபெறவுள்ளது. இதில் , ஏவுகணைகள் மற்றும் வான்வழி தாக்குதல் நடந்தால் எவ்வாறு மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும், BlockOut மின்சார துண்டிப்புக்கு மத்தியில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பவை கற்றுக்கொடுக்கப்படவுள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகை கடைசியாக 1971 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவிய போது நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தில் சென்னை துறைமுக பகுதி, கல்பாக்கம் அணுமின் நிலைய பகுதிகளில் மாலை 4 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகையொட்டி இன்போசிஸ் உள்ளிட்ட பிரபல ஐடி நிறுவனங்கள் விடுமுறை அளித்து பணிக்கு வர வேண்டாம் எனவும், பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.


























