ஏற்றுமதி பிசினஸ் செய்யணும் நினைக்கிறீங்களா..?? உங்களுக்காகவே அரசு வழங்கும் 3 நாள் பயிற்சி..!

0
???????? ??????? ????????? ???????????????..?? ????????????? ???? ???????? 3 ???? ???????..!
ஏற்றுமதி பிசினஸ் செய்யணும் நினைக்கிறீங்களா..?? உங்களுக்காகவே அரசு வழங்கும் 3 நாள் பயிற்சி..!

ஏற்றுமதி பிசினஸ் செய்யணும் நினைக்கிறீங்களா..?? உங்களுக்காகவே அரசு வழங்கும் 3 நாள் பயிற்சி..!

 

இன்றைய காலகட்டத்தில் அனைவரது மனதிலும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும்.  ஏன்? உங்களுக்கே அந்த ஆசை இருக்கலாம். இதேபோல், சிலருக்கு ஏற்றுமதி பிசினஸ் செய்வது கனவாக இருக்கலாம். ஆனால், அந்த செயலை முன்னெடுத்தப்பின் எந்த ஒரு அடிப்படை புரிதலும் இல்லாமல் சிலர் அதை கைவிடுவதும்  உண்டு. அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். நீங்கள் தாராளமாக ஏற்றுமதி தொழிலை தொடங்கலாம். அதற்காக தமிழக அரசு சிறந்த பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

அதாவது, தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்றுமதி தொழில் செய்ய நினைக்கும் நபர்களுக்கு, அதன் நுணுக்கங்களை பயிற்சி அளிக்க 3 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும், இதில் சிறந்த மற்றும் திறன்மிக்க நிபுணர்களை கொண்டு உங்களுக்கு ஏற்றுமதி குறித்த அனைத்து விதமான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

தகுதிகள் மற்றும் நடக்கும் இடம்:

இத்திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த  12ம் வகுப்பு முடித்தவர்கள் இணையலாம். மேலும், இப்பயிற்சி கரூர் மாவட்டம் தொழில் மையத்தில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறை பயிற்சிகளை வரும் டிசம்பர் 28.12.2024 தொடங்கி 30.12.2024 வரை நடைபெற உள்ளது. இதில், அரசு மூலம் வழங்கப்படும் மானியம் மற்றும் உதவி திட்டங்கள் ஆகியவை தெளிவாக விளக்கப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு http://www.editn.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்துகிறோம்.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!