ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை.. ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு!!
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், ரொக்க பணம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். இந்த நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள திமுக தலைமையிலான அரசு கடந்த 3 வருடங்களாக வேட்டி, சேலையை வழங்கவில்லை அதற்கு பதிலாக ரொக்கப்பணம் 21 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு ஆகியவற்றை வழங்கியது.
லட்டுக்கு ஆதார் வாங்கணுமா..? இது என்னடா புதுசா இருக்கு..
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) வரவிருக்கும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்க முன் கூட்டியே ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 1,77,64,476 சேலைகள் மற்றும் 1,77,22,995 வேட்டிகளை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.


























