
உங்களின் PF தொகை சரியாக செலுத்தப்படுகிறதா என்பதை சரிபார்க்கனுமா..? அப்போ கண்டிப்பா இந்த வழிமுறைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு தனிப்பட்ட PF கணக்கு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கின் மூலம் மாதந்தோறும் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி ஓய்வூதிய தொகையாக வரவு வைக்கப்படும். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் சரியாக PF கணக்கிற்கு செல்கிறதா என்பதை சரிபார்க்கும் விதிமுறைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
அதாவது, ஊழியர்களின் சார்பில் இருந்து சம்பளத்தில் 12% பணம் PF கணக்கில் டெபாசிட் ஆகும். அதே போல் உங்களின் நிறுவனமும் அதே அளவு பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். மேலும், ஒரு தனிநபர் வேலைய மாறும் போது தங்களது PF பணத்தை டிரான்ஸ்ஃபர் அல்லது வித்ட்ரா பண்ணிக்கொள்ளும் விருப்பமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சில நிறுவனங்கள் தனது ஊழியர்களின் சம்பளத்தை மட்டும் PF கணக்கில் டெபாசிட் செய்து, தாங்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் பணத்தை செலுத்தாமல் ஊழியர்களை ஏமாற்றுகின்றன. அதை சரிபார்க்க EPFO இணையதளமான www.epfindia.gov.in மூலம் உங்கள் லாகின் விவரங்களை உள்ளீட்டு For Employees விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் Member Passbook விருப்பதிற்குள் சென்று PF Passbook ஆப்ஷனை தேர்வு செய்து உங்களின் வைப்புத்தொகையை சரி பார்க்கலாம். இதுவே உங்களது PF தொகையை போனில் சரி பார்க்க நினைத்தால் “உமாங் செயலி” மூலமாகவோ அல்லது “011-22901406 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சரி பார்க்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























