தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழும் ‘பாரதி கண்ணம்மா’ பரீனா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

0
தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழும் 'பாரதி கண்ணம்மா' பரீனா - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழும் 'பாரதி கண்ணம்மா' பரீனா - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழும் ‘பாரதி கண்ணம்மா’ பரீனா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர் தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து வெளியிட்டுள்ளார்.

நடிகை பரீனா:

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி பரீனாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது குழந்தையுடன் தற்போது அவர் நேரம் செலவிட்டு வருகிறார். பரீனா ஒரு நல்ல அம்மாவாக மட்டுமல்லாமல் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். தனது குழந்தை வயிற்றில் சுமக்க தொடங்கி தொடங்கி அவர் பிறப்பதற்கு 2 வாரம் முன்னர் வரை சீரியலில் நடித்திருந்தார். பின் குழந்தையை சுகப்பிரசவம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் யோகா உடற்பயிற்சிகளை செய்து அதை வீடியோவாக பதிவிட்டிருந்தார்.

டிவி ஸ்டேஷனாக மாறும் ‘பிக்பாஸ்’ வீடு, மீண்டும் சண்டையிடும் தாமரை & ப்ரியங்கா – ப்ரோமோ ரிலீஸ்!

அது மற்ற பெண்களுக்கு ஊக்குவிப்பதாக இருந்தது. மேலும் தனது குழந்தை முகத்தை இன்னும் வெளியிடாமல் இருந்த அவர் குழந்தையின் கை கால் என தொட்டு ரசித்து வருகிறார். தன்னுடைய குறிக்கோளை மட்டுமே நோக்கி ஓடும் ஒரு பெண்ணாக அவர் இருக்கிறார். வேலை, குடும்பம் என அனைத்திலும் அவரது சிறந்ததை கொடுக்க வேண்டும் என பரீனா இருக்கிறார். அவர் புதிய அம்மா போல இல்லாமல் எல்லாம் தெரிந்த அம்மா போல இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என அவரது கணவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“பாக்கியலட்சுமி” சீரியல் இனியாவின் செல்ல பெயர்கள் – இன்ஸ்டா பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!

பரீனா சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் சீரியலில் நடிக்க வருவார் என ஆவலுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் அவர் தனது குழந்தையின் முகத்தை மறைந்து புகைப்படம் ஒன்றை ஷேர் செய்திருந்தார். பல சேனல்களுக்கு அவரது கணவர் தான் பேட்டி கொடுத்து வரும் நிலையில் பரீனா இன்ஸ்டாவில் பிரசவத்திற்கு பின் புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் குழந்தை பெற்ற பின் அழகு போய்விட்டது என கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!