“பாக்கியலட்சுமி” சீரியல் இனியாவின் செல்ல பெயர்கள் – இன்ஸ்டா பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!

0
"பாக்கியலட்சுமி" சீரியல் இனியாவின் செல்ல பெயர்கள் - இன்ஸ்டா பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!
“பாக்கியலட்சுமி” சீரியல் இனியாவின் செல்ல பெயர்கள் – இன்ஸ்டா பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா மேனன். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது செல்ல பெயர்கள் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதையில் அப்பாவி அம்மாவாக பாக்கியா இருக்க அவரை அவரது கணவர் கோபி ஏமாற்றுகிறார். அது தெரியாமல் குடும்பத்திற்காக சமையல் செய்து கொடுத்து உழைத்து வருகிறார் பாக்கியா. இந்நிலையில் பாக்கியாவிற்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் பையன் செழியனுக்கு திருமணம் முடிந்திருக்கிறது. இரண்டாவது பையன் எழில் திரைப்படம் எடுத்து வருகிறார்.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்? எவிக்சன் பட்டியல் ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

மூன்றாவது மகள் இனியா ஸ்கூலில் படித்து வருகிறார். இனியா கதாபாத்திரத்தில் நேகா மேனன் நடித்து வருகிறார். அவர் சன் டிவி வாணி ராணி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் ராதிகா நடிப்பில் வெளியான சித்தி 2 சீரியலிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். ஆனால் அவருக்கு விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததது மூலமாக நல்ல பெயர் கிடைத்தது. தான் குண்டாக இருப்பதாக பல கேலி கமெண்ட்கள் வந்தாலும் அதை எல்லாம் முறியடித்து சீரியலில் நடிப்பு திறமையை காட்டி வருகிறார்.

கோபியை விவாகரத்து வாங்க தூண்டும் ராதிகா, பாக்கியாவின் நிலை? சீரியலின் அடுத்த ட்விஸ்ட்!

இவருக்கு சமீபத்தில் தங்கை பிறந்தது. அது குறித்து சந்தோசமாக பதிவிட்ட அவர் தனது தங்கைக்கு தாய் போல கவனித்து வருகிறார். சிக்கு என தனது தங்கையை செல்ல பெயர் வைத்து தான் பேசுவார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் பல போட்டோஷூட் மற்றும் தனது தங்கையுடன் புகைப்படங்களை பதிவிடுவார். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொன்ன அவர், செல்ல பெயர் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில் நேகு, நேஹி, லட்டு, சப்ஸ், பாண்டா, செல்லி, மியாவ், மினியன் ஆகிய பெயர்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!