அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 7வது சம்பள கமிஷன் பரிந்துரை!!

0
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - 7வது சம்பள கமிஷன் பரிந்துரை!!

புதுச்சேரியில் நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்த 7வது சம்பள கமிஷனின் பரிந்துரை தற்போது அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி அம்மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முழுநேர தினக்கூலி ஊழியர்கள் வரிசையில், பிரிவு 1, 2 மற்றும் 3 ஊழியர்களுக்கு ரூ. 876 ஆக இருந்த ஊதியம் ரூ. 900 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பிரிவு-4 ஊழியர்களுக்கு ரூ.968லிருந்து ரூ.995 ஆகவும், பிரிவு 5 ஊழியர்களுக்கு ரூ.1,241 லிருந்து ரூ.1,275 ஆகவும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இறுதியாக பிரிவு 6 ஊழியர்களின் சம்பளம் ரூ.1,421 லிருந்து ரூ.1,460 ஆக ஏற்றம் கண்டுள்ளது.

TNPSC குரூப் 4 புவியியல் தேர்வு – இந்த வினாக்கள் கூட கேப்பாங்க!!

இந்த ஊதிய உயர்வு ஜனவரி.1,2024 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பகுதி நேர ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.13,140 லிருந்து ரூ. 13,500 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அரசுத்துறை பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக அகவிலைப்படி 46% லிருந்து 50% ஆக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!