முடிவுக்கு வரும் சன் டிவியின் ‘எதிர்நீச்சல்’ சீரியல்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சன் டிவியின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் ரசித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அதன் எதிர்நீச்சல் சீரியலின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
எதிர்நீச்சல் சீரியல்:
சன் டிவியில் இரவு 9:30 மணியான பீக் டைமில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரேட்டிங்கில் எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால், குணசேகரன் கதாபாத்திரம் தற்போது கடிதம் எழுதி வைத்து ஊரை விட்டு சென்று விட்டதாக சீரியலில் கதைகள் நகர்ந்து வருகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இன்றி சீரியல் நகர்வது மிகவும் சிரமம்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான 4% அகவிலைப்படி உயர்வு – வெளியான அதிரடி தகவல்!
மேலும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேறு ஒரு பொருத்தமான நடிகரை தேர்வு செய்யும் பணியில் சீரியல் குழுவினர் ஈடுபட்டுள்ளதால், இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு சிறிய இடைவேளை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஒருவர் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் புதிய ஆதி குணசேகரன் சீரியலில் கலக்குவார் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் ஆதி குணசேகரன் ஊரைவிட்டு சென்று விட்டதாக வரும் காட்சிகளின் காரணமாக எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.