33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. இங்கிலாந்து வெளியேற்றம்!
உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றியை பெற்றுள்ளது.
உலகக்கோப்பை:
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பாண்டில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. நேற்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. தொடக்கத்தில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தில் நிதானத்தை கடைபிடித்தது.
தமிழகத்தில் நாளை (நவ.06) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 49.3 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 48 புள்ளி ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 253 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்தியா 14 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேலும் நேற்றைய போட்டியின் முடிவாக ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கான தகுதி பட்டியலில் இடம் பெற்று இங்கிலாந்தை வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்