
திடீரென அரசாங்க பொறுப்பிலிருந்து விலகும் எலான் மஸ்க்.. டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன..?? அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். பின்னர் எண்ணற்ற சட்ட திருத்தங்கள் செய்த டிரம்ப், அமெரிக்க அரசின் செலவுகளை குறைத்து செயல்திறனை அதிகரிக்க, அரசாங்க செயல்திறன் துறை (DOGE) யை உருவாக்கினார். இந்த துறைக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை தலைமை அதிகாரியாக நியமித்தார். மேலும், எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க அரசாங்கம் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சேமித்துள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “அமெரிக்க அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவார் என டிரம்ப் தனது நெருங்கிய வட்டத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் மஸ்க், தனது தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவர் அரசுத்துறை பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது”. இந்நிலையில் மஸ்கின் யூகிக்க முடியாத சில நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடுமோ என டிரம்ப் நிர்வாகத்தினர் விரக்தி அடைந்துள்ளனர்.























