
இந்தியாவுக்கு சாதகமாக மாறிய அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு.. பொருளாதார நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்.. !!
தெற்காசிய நாடுகள் மீது ஏப்ரல் 2ம் தேதி முதல் பதிலுக்கு பதில் வரியை அமெரிக்கா விதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி இந்த பரஸ்பர வரி விதிப்பு பற்றிய முக்கிய தகவல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் “இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26%, சீனாவிற்கு 34%, வியட்நாமிற்கு 46%, தைவானுக்கு 32%, இலங்கைக்கு 44%, இந்தோனேசியாவிற்கு 32% மற்றும் ஜப்பானிற்கு 24% பரஸ்பர வரி விதிக்கப்பட்டது”. மேலும், அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்படும் 10% அடிப்படை வரி ஏப்ரல் 5 தேதியும், அதிக பரஸ்பர வரி ஆனது ஏப்ரல் 9 ஆம் தேதியும் அமலுக்கு வரும் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வரி விதிப்பு குறித்து மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மத்திய அரசுக்கு ரூ.1757 கோடி காலி – CAG வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
அதாவது, “டிரம்ப் விதித்த இந்த கூடுதல் இறக்குமதி வரி விதிப்பினால் ஆசிய நாடுகளுக்கு அதிக அளவில் பாதிப்படையும் என்றும், அது இந்தியாவுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மறுபுறம், டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி விதிப்பு பட்டியலில் மக்கள் வசிக்காத அண்டார்டிகா தீவுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பென்குயின் பறவை இனம் மட்டுமே வசிக்கும் தீவுகளையும் விட்டுவைக்காமல் டிரம்ப் வரி விதித்திருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது”.

























