TN Weather Update: தமிழகத்தில் இந்தந்த மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

0
TN Weather Update: ??????????? ??????? ????????????? ????????? ????? ?????????????.. ?????? ????? ??????? ??????? ???????..!!
TN Weather Update: தமிழகத்தில் இந்தந்த மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

TN Weather Update: தமிழகத்தில் இந்தந்த மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

கடந்த சில நாட்களாக கோடை வெயிலால் தமிழகத்தில் வெப்பநிலை தீவிரமடைந்துள்ளது. இதனால் மக்கள் மதிய வேளைகளில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

அதன்படி “இன்று (04-04-2025) மற்றும் நாளை (05-04-2025) தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்றும், ஏப்ரல் 6  முதல் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 34-35 செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸாக இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!