மனித இயல்புடன் புதிதாக உருவாகும் ‘ரோபோ’ – எலான் மஸ்க் அறிவிப்பு!

0
மனித இயல்புடன் புதிதாக உருவாகும் 'ரோபோ' - எலான்
மனித இயல்புடன் புதிதாக உருவாகும் 'ரோபோ' - எலான்
மனித இயல்புடன் புதிதாக உருவாகும் 'ரோபோ' - எலான் மஸ்க் அறிவிப்பு!

உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டெஸ்லா, தற்போது மனித இயல்புகளுடன் கூடிய ஒரு புதிய ரோபோவை வடிவமைத்து வருவதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த ரோபோவின் சில அம்சங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

ரோபோ உருவாக்கம்

வருங்காலங்களில் பல்வேறு துறைகளில் ரோபோ என்ற தானியங்கி இயந்திரங்கள் ஆட்சியமைக்கும் எனும் கூற்றை உறுதி செய்யும் வகையில் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை சினிமா திரைப்படங்களில் மட்டும் மக்கள் கண்டு களித்து வந்த ரோபோ இயந்திரம் எதிர்கால பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்டு வருவதாக டெஸ்லா நிறுவனரும், உலக பணக்காரர்களின் ஒருவருமான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் நாமினி நியமனம்! வழிமுறைகள் இதோ!

அந்த வகையில் அடுத்து வரும் ஆண்டுகளில் மனித உருவம் கொண்ட ஒரு ரோபோவை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது மனித வாழ்க்கையை எளிதாக்கும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டாலும் அதில் இருக்கும் பின் விளைவுகளை ஒருவரும் அறியாமல் இல்லை. என்றாலும் காலங்கள் மாறுகையில் புதிய தொழில் நுட்பத்துக்கு ஏற்ப இன்றைய காலத்து மனிதர்கள் ஈடுகொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர்க்கு மளிகை பொருட்கள் – அதிகாரி உத்தரவு!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த வகை ஹியூமனாய்ட் ரோபோக்கள் சுமார் 5 அடி உயரமும், 8 இன்ச் உயரமும், 125 பவுண்டுகள் எடையுள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மனித உறவுகளுடன் நட்புறவாக இருக்கும் வகையில் உருவாக்கப்படும் இவற்றால் மணிக்கு சுமார் 5 மைல் வேகத்தில் நடக்கவும், 45 பவுண்ட் எடையை சுமக்கவும் முடியும். அடுத்த ஆண்டில் இந்த ரோபோவின் மாடல் ஒன்று விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!