தமிழகத்தில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து – அரசுக்கு வலுயுறுத்தல்!
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்வது குறித்து அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
கல்விக் கடன் ரத்து:
ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாக மாறிவிடக்கூடாது என்னும் காரணத்திற்காக கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன்களை வங்கிகள் மூலம் அரசு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி கடன்களை மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்த ஒரு வருடத்திற்கு பிறகு செலுத்த தொடங்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
இதற்காக குறைவான வட்டி விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.
தமிழக ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்த முடிவு – அமைச்சர் புதிய உத்தரவு!
100% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு தனது வாக்குறுதியின் படி மாணவர்களின் கல்வி கடனை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.