EdCIL நிறுவனத்தில் Consultant பணிக்கு ரூ.1 லட்சம் ஊதியம் – 39 காலியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
EdCIL நிறுவனத்தில் Consultant பணிக்கு ரூ.1 லட்சம் ஊதியம் - 39 காலியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
EdCIL நிறுவனத்தில் Consultant பணிக்கு ரூ.1 லட்சம் ஊதியம் - 39 காலியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
EdCIL நிறுவனத்தில் Consultant பணிக்கு ரூ.1 லட்சம் ஊதியம் – 39 காலியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

EdCIL India’s Limited-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Principal Chief Consultants, Chief Consultants, Senior Consultants, Consultants ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 39 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் EdCIL India’s Limited
பணியின் பெயர் Principal Chief Consultants, Chief Consultants, Senior Consultants, Consultants
பணியிடங்கள் 39
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
EdCIL India’s Limited காலிப்பணியிடங்கள்:

EdCIL India’s Limited-ல் காலியாக உள்ள 39 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Principal Chief Consultants – 02 பணியிடங்கள்
  • Chief Consultants – 04 பணியிடங்கள்
  • Senior Consultants – 07 பணியிடங்கள்
  • Consultants – 26 பணியிடங்கள்
EdCIL பணிகளுக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, MBA, M.Tech, PG Diploma, B.Tech, LLB ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.

EdCIL பணிகளுக்கான முன்னனுபவம்:

இந்த EdCIL India’s Limited பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

EdCIL பணிகளுக்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Principal Chief Consultants – அதிகபட்சம் 55 வயது
  • Chief Consultants – அதிகபட்சம் 45 வயது
  • Senior Consultants – அதிகபட்சம் 40 வயது
  • Consultants – அதிகபட்சம் 35 வயது

ISRO VSSC விண்வெளி மையத்தில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை ரெடி – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

EdCIL India’s Limited மாத சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

EdCIL India’s Limited தேர்வு முறை:

இந்த EdCIL India’s Limited பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EdCIL India’s Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 08.11.2023 அன்று முதல் 28.11.2023 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!