ECHS ஆணையத்தில் Nursing Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.28,100/- || முழு விவரங்களுடன்!
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Nursing Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
ECHS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Nursing Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
Nursing Assistant கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma / ITI / Nursing தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ECHS வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
Nursing Assistant ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.28,100/- ஊதியமாக வழங்கப்படும்.
ECHS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(24.10.2024) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.10.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























