தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ரத்து – மின்வாரியம் தகவல்!
தமிழகத்தில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் கூடுதல் மின்கட்டணம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு:
தமிழகத்தில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், அரசு அளித்த ஒப்புதலின் படி, வரும் ஜூலை 1ம் தேதி முதல் கூடுதலாக 4.70% மின்கட்டணம் உயர்த்தப்டும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதே போல், தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பேருந்து வசதி – குவியும் பாராட்டுக்கள்!
தொடர்ந்து இந்த மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதன்படி, தற்போது மின்வாரியம் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்த வித மின்கட்டண உயர்வும் அமல்படுத்தப்படாது என்றும், தொடர்ந்து அனைத்து இலவச சலுகைகளும் வழங்கப்படும் என்றும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட்டுக்கு 13 முதல் 21 பைசா வரை உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.