
IPL 2025: CSK vs MI போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகள்.. சென்னை போக்குவரத்து துறை அறிவித்த முக்கிய தகவல் ..
இந்தியன் பிரீமியர் லீக் (IPL), என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் லீக் போட்டி ஆகும். இப்போட்டியானது 2008 ஆம் ஆண்டு BCCI யால் நிறுவப்பட்ட பத்து அணிகளுக்கிடையே நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 17 சீசன்கள் முடிந்த நிலையில் 18 வது சீசனுக்கான முதல் போட்டி இன்று (22-03-2025) கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் போட்டி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “நாளை (23-03-2025) நடக்கவிருக்கும் 2025 IPL தொடரின் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதவுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி மற்றும் மெரினா உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தி உள்ளதாக சென்னை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது”.

























