கனமழை எதிரொலி.. நாளை (அக்.16) அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு பகலாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த 4 மாவட்டங்களிலும் நாளை (அக்டோபர் 16) முக்கிய துறைகளை தவிர மற்ற அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


























