
முருங்கைக்காய் பிரியர்களுக்கு ஷாக்…தமிழகத்தில் இன்று விலை அதிரடி உயர்வு…!! ” மேலும், பூண்டு கிலோவிற்கு எவ்வளவு தெரியுமா”..??
நம் அன்றாட வாழ்க்கையில் உட்கொள்ளும் உணவுகளில் காய்கறிகள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும், தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால், தற்போது காய்கறிகளின் விளைச்சல்கள் பெரிதளவில் பாதிப்பு அடைந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் இன்று முருங்கைக்காய் மற்றும் பூண்டின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் முருங்கைக்காய் நேற்று வரை 1 கிலோ ரூ.250 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து, மொத்த விலைக்கு 1 கிலோ ரூ. 350 ரூபாயாகவும் மற்றும் சில்லறை விலைக்கு ரூ.380 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சந்தையில் இன்று பூண்டின் விலை 1 கிலோ ரூ.450 ரூபாயாகவும் மற்றும் புறநகர் பகுதிகளில் 1 கிலோ ரூ.550 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.























