
TNPSC குரூப் 4 தேர்வாளர்கள் கவனத்திற்கு…தேர்வு குறித்த புதிய அறிவிப்பு வெளியீடு..!! ” TNPSC ஆணையம் தகவல்”..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி, அதன் மூலம் தேர்ச்சி பெற்றவர்களை பணி அமர்த்தி வருகிறது. அந்த வகையில், 9,491 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, கடந்த ஜூன் மாதம் 9ம் தேதியன்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி அன்று TNPSC ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அந்த வகையில், TNPSC குரூப் 4 தேர்வு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, குரூப் 4 பதவிகளுக்கான கலந்தாய்வு, அடுத்த 2025 ஆண்டு, ஜனவரி மாதம் நடைபெறும் என்று TNPSC ஆணையம் தெரிவித்துள்ளது.























