முட்டை மயோனைஸை தடை செய்யுமா அரசு?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
தற்போதைய காலகட்டத்தில் வீட்டில் சமைக்கும் உணவுகளை விட உணவகங்களில் சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. உள்ளூர் உணவு வகைகளை தவிர்த்து மற்ற மாநில உணவுகளை ருசித்துப் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.அந்த வகையில் மக்கள் விரும்பி சாப்பிடும் முட்டை மயோனைஸ் தொடர்பாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ரத்தன் டாடாவின் உயில்… 10,000 கோடி சொத்து இனி யாருக்கு தெரியுமா..? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க..!!
அதாவது முட்டை கொண்டு செய்யப்படும் மயோனைஸின் பயன்பாடு மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்க ஹைதராபாத் உணவு பாதுகாப்பு துறை தெலுங்கானா அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மயோனைஸ் கலந்த ஷவர்மா, சிக்கன் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டு மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவது அதிகரித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மயோனைஸ் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும், இது மனிதர்கள் உண்ண தகுந்ததல்ல எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



























