நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. விவரம் உள்ளே!!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளை (அக்டோபர் 26) தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு முதல் நாள் விடுமுறையா?? ஆலோசனையில் தமிழக அரசு.. முழு விவரம் உள்ளே!!
மேலும், இந்த கனமழை அக்டோபர். 27 ஆம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



























