ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 09 & 10, 2019
- நாடு முழுவதும் உள்ள 14.5 கோடி விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
- அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பு வளாகங்களில் “சோலார் மரங்கள்” நிறுவும் வாய்ப்பை ஆய்வு செய்ய மத்திய பொதுப்பணித் துறை (CPWD) தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
- சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்ச்சி ராஞ்சியில் உள்ள பிரபாத் தாராவில் ஜூன் 21, 2019 அன்று நடைபெற உள்ளது.
- மும்பை மெட்ரோ செயல்படத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது. தற்போதுள்ள மும்பை மெட்ரோ மத்திய கட்கோபர் மற்றும் தலைநகரின் மேற்குப் பகுதியான வெர்சோவாவை இணைக்கிறது.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை, 2031 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்வாழ்வு திட்டத்தை அபுதாபியில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக் கொண்டது.
- இந்த ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இறக்குமதிகள் 92 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2.84 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.
- வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை [MSME] ஊக்குவிக்க இந்தியா வலியுறுத்தல்.
- அக்டோபர் கடைசியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு முன்னதாகவே இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தென் கொரியாவும் பிரிட்டனும் கொள்கை அடிப்படையில் ஒப்புதல்.
- சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆன்லைன் போர்ட்டல் http://haj.nic.in/pto/ மற்றும் மொபைல் செயலி(HPFS) ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
- உலக தடகள விளையாட்டின் ஆளும் குழுவான, IAAF-ஐ, உலக தடகள விளையாட்டு என பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளது.
- 2019 கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், லூயிஸ் ஹாமில்டன் ஏழாவது முறையாக வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார்.
- பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 12-வது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 09 & 10, 2019 video – Click Here
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்