நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 09 &10, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 09 &10, 2019

தேசிய செய்திகள்

அனைத்து விவசாயிகளுக்கும் PM-KISAN திட்டம் பொருந்தும்
 • நாடு முழுவதும் உள்ள 14.5 கோடி விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • தகுதிவாய்ந்த விவசாயிகளை அடையாளம் காண்பது மற்றும் பிரதமரின்-கிசான் போர்ட்டலில் அவற்களின் தரவைப் பதிவேற்றம் செய்யும் பொறுப்பு முழுவதும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரச ஊழியர்களின் குடியிருப்பு வளாகங்களில் ‘சோலார் மரங்கள்’ நிறுவ CPWD திட்டம்
 • அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பு வளாகங்களில் “சோலார் மரங்கள்” நிறுவும் வாய்ப்பை ஆய்வு செய்ய மத்திய பொதுப்பணித் துறை (CPWD) தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
 • இந்த நடவடிக்கை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதோடு, மத்திய அரசாங்கத்தின் பிரதான கட்டுமான நிறுவனமான CPWD ஆல் கார்பன் தடத்தை குறைக்க முயல்கிறது. குஜராத்தின் தண்டியில் உள்ள தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவகத்தில் “சோலார் மரங்கள்” முதன்முதலாக CPWD ஆல் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட்
சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்வு ராஞ்சியில் நடைபெறவுள்ளது
 • சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்ச்சி ராஞ்சியில் உள்ள பிரபாத் தாராவில் ஜூன் 21, 2019 அன்று நடைபெற உள்ளது. இந்த முக்கிய நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்த உள்ளார்.
 • ஜார்க்கண்ட் மாநில அரசு இந்த நாளை மிகப் பெரிய முறையில் கொண்டாட வேண்டும் என்று ஒரு வாரம் நீண்ட திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் ஜூன் 15லிருந்து தொடங்க உள்ளது.
மும்பை மெட்ரோ செயல்படத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவு
 • மும்பை மெட்ரோ செயல்படத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது. தற்போதுள்ள மும்பை மெட்ரோ மத்திய கட்கோபர் மற்றும் தலைநகரின் மேற்குப் பகுதியான வெர்சோவாவை இணைக்கிறது.

சர்வதேச செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சரவை “2031 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்வாழ்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது”
 • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை, 2031 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்வாழ்வு திட்டத்தை அபுதாபியில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக் கொண்டது. கொள்கை வகுப்பதற்கான செயல்முறைக்கு உதவும் ‘தேசிய நல்வாழ்வு ஆய்வுமையம்’ உருவாக்குவது என்பது இந்த முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாகும்.
 • இது நல்வாழ்வுக்கு ஒருங்கிணைந்த கருத்துகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது யுஏஇ பார்வை 2021 [UAE Vision 2021] மற்றும் யுஏஇ நூற்றாண்டு 2071 [UAE Centennial 2071]க்கு ஆதரவாக உள்ளது. இது தனிநபர்கள், சமூகம் மற்றும் நாடு ஆகிய மூன்று முக்கிய நிலைகளான தேசிய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

வணிக மற்றும் பொருளாதார செய்திகள்

மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்கள் 92% வீழ்ச்சி
 • புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து பொருட்களின் மீதான 200 சதவீத சுங்க வரி விதிப்பைனால் இந்த ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இறக்குமதிகள் 92 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2.84 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.
 • பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட MFN (மிகவும் ஆதரவளிக்கப்பட்ட நாடு) அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. 1996ல் இந்தியா, பாகிஸ்தானுக்கு MFN அந்தஸ்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்து வரும் நாடுகளில் MSME களை ஊக்குவிக்க இந்தியா வலியுறுத்தல்
 • வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை [MSME] ஊக்குவிக்க இந்தியா வலியுறுத்தல். இதை ஜப்பான் நகரமான த்சுகுபாவில் நடைபெற்ற ஜி20 நாடுகள் சந்திப்பில் வர்த்தக மற்றும் தொழிற்துறை மந்திரி பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
 • MSMEs இந்தியாவின் ஏற்றுமதிகளில் சுமார் 45 சதவிகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகிதம், இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 33 சதவிகிதத்திற்கும் மேலாக பங்களிப்பு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஜி-20 அமைப்பு என்பது 20 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் குழுமம் ஆகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அமைச்சரவை ஒப்புதல்

தென்கொரியா மற்றும் இங்கிலாந்து இடையே இலவச வர்த்தக ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட ஒப்புதல்
 • அக்டோபர் கடைசியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு முன்னதாகவே இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தென் கொரியாவும் பிரிட்டனும் கொள்கை அடிப்படையில் ஒப்புதல். தென் கொரிய ஏற்றுமதியான கார் பாகங்கள் மற்றும் வாகனங்களை இந்த ஒப்பந்தம் மூலம் இலவச வர்த்தகம் செய்ய வழிவகுக்கும்.
 • 2018 ஆம் ஆண்டில், பிரிட்டனுக்கான தென் கொரிய ஏற்றுமதிகள் $ 6.4 பில்லியனாக இருந்தன, இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 1.05% ஆகும்.

மொபைல் செயலி &போர்ட்டல்

HPFS மொபைல் செயலி
 • அனைத்து இந்திய ஹஜ் யாத்ரிகர்களிடமும் சிறந்த அமைப்பு மற்றும் அனுபவத்திற்காக, சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆன்லைன் போர்ட்டல் http://haj.nic.in/pto/ மற்றும் மொபைல் செயலி(HPFS) ஒன்றை அறிமுகப்படுத்தினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,32,000 யாத்ரிகள் எண்ணிக்கையிலிருந்து 2 லட்சம் யாத்ரிகள் ஹஜ் பயணம் செய்ய இந்தியர்களுக்கு ஒதுக்கீடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

உலக தடகள விளையாட்டாக IAAFன் பெயர்மாற்றம்
 • உலக தடகள விளையாட்டின் ஆளும் குழுவான, IAAF-ஐ, உலக தடகள விளையாட்டு என பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளது. சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் (IAAF) 1912 இல் சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பால் நிறுவப்பட்டது. தற்போது ஒலிம்பிக்கில் இரண்டு முறை 1500 மீட்டர் தங்கப் பதக்கம் வென்ற பிரிட்டனின் செபாஸ்டியன் கோய் தலைமையில் இந்தக் கூட்டமைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 • டோஹாவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் அதனைத்தொடர்ந்து நடக்கவுள்ள காங்கிரஸ் கூட்டத்திற்குப்பின் அக்டோபர் மாதம் சட்டப்பூர்வ பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் பெற்ற பின் இந்தப் பெயர்மாற்றம் நடைமுறைக்கு வரும்.
கனடியன் கிராண்ட் பிரிக்ஸ்
 • 2019 கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், லூயிஸ் ஹாமில்டன் ஏழாவது முறையாக வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார். செபாஸ்டியன் வெட்டல் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காக இந்தப்போட்டியில் தண்டிக்கப்பட்டார்.
12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று நடால் சாதனை
 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 12-வது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்தார். ரோலண்ட் கர்ரோஸில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியமை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் நடால் வெற்றி பெற்றார்.
 • ஒரே கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 12 ஒற்றையர் பட்டங்களை வென்ற முதல் வீரர் எனும் சாதனை படைத்தார் ரபெல் நடால், ஒட்டுமொத்தமாக இவர் 12 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஒற்றையர் பட்டங்களை பெற்று ரோஜர் பெடெரெர் முதல் இடத்திலும், 15 ஒற்றையர் பட்டங்களை பெற்று மூன்றாம் இடத்தில் உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிக் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 09 & 10, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!