TNPSC குரூப் 1 தேர்வு பாடத்திட்டங்கள் & மதிப்பெண்கள் – முழு விவரம் இதோ!

0
37 நாட்களில் TNPSC Group 4 தேர்வு.. இந்த கேள்விகள் படிச்சாச்சா??
TNPSC குரூப் 1 தேர்வு பாடத்திட்டங்கள் & மதிப்பெண்கள் – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு 90 காலிப்பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த தேர்வுக்கு எந்தெந்த பாடப்பிரிவுகளில் எத்தனை மதிப்பெண் வரும் என தெரிந்து கொண்டால் எளிமையாக படிக்கலாம். அதாவது குரூப் 1 முதல் நிலை தேர்வில் 200 கேள்விகள் இருக்கும். அதில் 150 கேள்விகளுக்கு விடை அளித்தால் எளிமையாக தேர்ச்சி பெறலாம். இதில் 50 கேள்விகள் கணிதம் இருக்கும். 25-30 கேள்விகள் நடப்பு நிகழ்வுகள் இருக்கும்.

மீதமுள்ள 120- 125 கேள்விகள், அடிப்படை அறிவியல், புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு, பொருளியல் ஆகியவை வரும். இவை அனைத்தும் அரசு பள்ளி பாட புத்தகத்தில் இருந்து கேட்கப்படும். அதன் பின் முதன்மை தேர்வில் 3 தாள்கள் இருக்கும். அதாவது இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய மற்றும் தமிழ்நாடு – சமூக பிரச்சனைகள், திறனறிவு மற்றும் கணிதம் முதல் தாளிலும், இந்தியா அரசியல் மற்றும் சமீபத்தில் நிகழ்ந்த அரசியல் முக்கிய சம்பவங்கள், இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழ் சமூகம் – கலாச்சாரம் மற்றும் பண்பாடு இரண்டாம் தாளிலும், புவியியல் -இந்தியா மற்றும் தமிழ்நாட்டு, சுற்றுசூழல், உயிர் பன்முகத்தன்மை, பேரிடர் மீட்பு, இந்தியா பொருளாதாரம் மூன்றாம் தாளிலும் வரும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!