மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ் – என்னென்ன தெரியுமா?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ் - என்னென்ன தெரியுமா?

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்புடன் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

ஊதிய உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களின்  2024 ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு இதுவரை வெளியாகி உள்ள ஏ ஐ சி பி யை குறியீட்டு தகவல்களின்படி நான்கு சதவீதமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெற்று வரும் 46 சதவீத அகவிலைப்படி கூடுதலான நான்கு சதவீதத்துடன் சேர்ந்து மொத்தம் 50 சதவீதமாக உயர உள்ளது. அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் பட்சத்தில் ஊழியர்களுக்கான பயணம் கொடுப்பனவு மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவுகளும் உயரும். அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் டி ஏ உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்.

TNPSC Group IV தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? – பாஸாக இத படித்தால் போதும்!

அதன் பின்னர் ஊழியர்களுக்கான பயண கொடுப்பனவு நகரங்களுக்கு ஏற்ப  கிரேட் 1 முதல் கிரேடு 8 வரை குறைந்தபட்ச ரூபாய் 1800 முதல் அதிகபட்சம் ரூபாய் 3600 வரை வழங்கப்படும். இதை தவிர வீட்டு வாடகை கொடுப்பனவானது அரசு ஊழியர்கள் குடியிருக்கும் நகரங்களுக்கு ஏற்ப X, Y மற்றும் Z  என்ற வகை பிரிவின்படி முறையே 30, 27 மற்றும் 21 சதவீதமாக உயரும். இந்த மூன்று அறிவிப்புகளும் வெளியாகும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்கள் சிறப்பான பலன்கள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!