TANCET 2024 நுழைவுச்சீட்டு – சற்றுமுன் வெளியீடு!  

0
TANCET 2024 நுழைவுச்சீட்டு - சற்றுமுன் வெளியீடு!  

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள TANCET தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதை தேர்வர்கள் பெறுவதற்கான எளிய வழிமுறை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TANCET 2024 நுழைவுச்சீட்டு:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் TANCET தேர்வு என்பது முதுகலை பட்ட (PG) படிப்பிற்கான நுழைவுத் தேர்வாகும். இந்த வகையில் நடப்பாண்டின் (2024) MCA, MBA டிகிரிகளுக்கான TANCET தேர்வானது வருகின்ற மார்ச் மாதம் 9ம் தேதி காலை, மாலை என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. இத்தேர்வானது காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.1,000 உரிமைத்தொகை திட்ட பெண்களுக்கு வந்த திடீர் SMS – சர்பிரைஸ் தகவல்!

இந்நிலையில்  TANCET 2024 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை அண்ணா பல்கலைக்கழகமானது இன்று (21.02.2024) வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் http://tancet.annauniv.edu/ என்ற இணையதள இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த நுழைவுச் சீட்டை பெற விரும்பும் நபர்கள் login பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளிட வேண்டும். இத்தேர்வானது 100 மதிப்பெண்களுக்கு MCQ தேர்வு முறைப்படி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!