50 ஆண்டுகால வரலாற்றில் புதிய மைல்கல்.. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை சாதனை!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் நேற்று (செப்டம்பர் 29) பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை ஆகிய கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை, கோவி. செழியன் – உயர்கல்வித்துறை, ஆர்.ராஜேந்திரன் – சுற்றுலாத்துறை, ஆவடி நாசர் – சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Today Gold Rate: இன்று தங்கம் விலை குறைவு..!! ” “சவரனுக்கு எவ்வளவு தெரியுமா”..??
இதன் மூலம் இந்தியாவின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 4 பட்டியலின அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை என்ற பெருமையை, தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமைச்சரவை பெற்றுள்ளது. கோவி செழியன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், சி.வி.கணேசன் ஆகிய 4 பட்டியலின அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது இடம்பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
























