நடப்பு நிகழ்வுகள் – 18 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 18 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 18 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 18 மே 2023

தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் அசாமில்வெள்ள நிவாரணப் பயிற்சிஜல் ரஹத்“-   நடத்தயுள்ளது.

 • இந்திய ராணுவத்தின் கஜ்ராஜ் பிரிவானது, அசாமில் உள்ளமானஸ்ஆற்றின் ஹகிராமா பாலத்தில் வெள்ள நிவாரண வியூகங்கள் மூலம் தயார்நிலையை ஒருங்கிணைக்கஜல் ரஹத்எனப்படும்  “கூட்டு வெள்ள நிவாரண கூட்டுப் பயிற்சியை” 16 மே அன்று நடத்தயுள்ளது.
 • இந்த நிகழ்வில் இராணுவம், NDRF மற்றும் SDRF ஆகியவற்றின் சிறப்புக் குழுக்களின் கூட்டு முயற்சிகளால்வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் இருந்து மக்களை எவ்வாறு மீட்டெடுப்பது குறித்த ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்திகைஆகியவை இதில் அடங்கும் என இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி-2023

 • நமது கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அருங்காட்சியகங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறதுஇந்த ஆண்டுக்கான 47வது சர்வதேச அருங்காட்சியக தினத்தை (IMD) கொண்டாடும் வகையில், “மே 18″ அன்று புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
 • இந்த ஆண்டுக்கான கருப்பொருள்அருங்காட்சியகங்கள், நிலைத்தன்மை மற்றும் நல்வாழ்வு (Museums, Sustainability and Well Being)என்பதாகும்.

ஆசிய பெட்ரோகெமிக்கல் துறை மாநாடு 2023 இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளது.

 • இந்தியாவின்ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கமானது(CPMA) மே 18-19 ஆம் தேதிகளில் புதுதில்லியில்ஆசிய பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரி மாநாடு 2023″ (APIC 2023) 41வது பதிப்பை நடத்த உள்ளது.
 • இது பெட்ரோ கெமிக்கல் துறையைச் சேர்ந்த உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைத்து வளர்ச்சி, வர்த்தகம், முதலீடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை தொடர்பான முக்கிய பிரச்சினைகளை பற்றி விவாதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

சாகர் பரிக்ரமாவின் 5 ஆம் கட்ட பயிற்சியானதுமகாராஷ்டிராவின் ராய்காட்டில் தொடக்கம்

 • சாகர் பரிக்ரமாவின் 5 ஆம் கட்ட பயிற்சியானது மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தொடங்கி ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க், கோவாவின் வாஸ்கோ, மோர்முகாவ் மற்றும் கனகோனாவில் வந்து தனது பயிற்சியை நிறைவு செய்ய உள்ளது.(6 இடங்களை உள்ளடக்கியுள்ளது)
 • மீனவ மக்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் பல்வேறு மீன்வளம் தொடர்பான திட்டங்கள் மற்றும் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) மற்றும் கிசான் கிரெடிட் கார்டுகள் (KCC) போன்ற திட்டங்கள் பற்றிய தகவல்களைப் மக்களிடையே பரப்புவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

சர்வதேச செய்திகள்

2040-க்குள்பிளாஸ்டிக் மாசுபாட்டை 80% ஆக குறைக்க.நாவானதுவழித்திட்டத்தைவழங்கியுள்ளது 

 • 2040ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மாசுபாட்டை 80 சதவீதம் ஆக குறைக்கத் தேவையானபொருளாதார மற்றும் வணிக மாதிரிகளை ஆய்வு செய்யும் அறிக்கையைஐநா சுற்றுச்சூழல் அமைப்பானது மே 16 அன்று வெளியிட்டுள்ளது 
 • மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் மறுசீரமைப்பை பல்வகைப்படுத்துதல் என மூன்று சந்தை விதிகளை இந்த அறிக்கையின் வாயிலாக உலக நாடுகள் பின்பற்ற . நா வலியுறுத்தியுள்ளது.

உலகின் முதல் ஜுமாஞ்சி கருப்பொருளைக் கொண்ட பூங்கா இங்கிலாந்தில் தொடக்கம் 

 •  £17 மில்லியன் மதிப்புள்ள பூங்காவனது செசிங்டன் வேர்ல்ட் ஆஃப் அட்வென்ச்சர்ஸ் ரிசார்ட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
 • ஜுமாஞ்சி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதில் உள்ள கதாபாத்திரங்களை பார்த்து ரசிக்கும் வகையில் இந்த பூங்காவானது அமைக்கப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

&காதோடா மாவட்ட நிர்வாகமானதுஇணையவழி பொதுக் குறைகளை நிவர்த்தி செய்யும் கண்காணிப்புஅமைப்பைத் தொடங்கியுள்ளது.

 • ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள தோடா மாவட்ட நிர்வாகம்ஆன்லைன் பொது குறை தீர்க்கும் கண்காணிப்பு அமைப்பைமே 16 அன்று தொடங்கியுள்ளது.
 • மக்கள் www.adhbutdoda.org என்ற இணையதளம் வழியாக தங்கள் புகார்களை எளிமையான மற்றும் வெளிப்படையான முறையில் பதிவு செய்யலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வலைத்தளமானது மக்களுக்கு திறமையான, வெளிப்படையான மற்றும் பயனுள்ள கூறுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

டோக்ராவில் நடைப்பெறும் சமையல் கலாச்சார போட்டியில்ஜம்முவின் கலரியானது (Jammu Of Kalari)” பிரதிநிதித்துவப்படுத்தபட்டுள்ளது.

 • ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உதம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்கு அறியப்பட்ட கலரியானது(உணவு), அடுத்த வாரம் ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில், சிறப்பு டோக்ரா சமையல் பொருளாக வழங்கப்படும் என ஜம்மு&காஷ்மீர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
 • உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் பல தசாப்தங்களாக உற்பத்தி செய்து, சந்தையில் விற்று வரும் கலரியை உலக அளவில் விளம்பரப்படுத்த இந்திய அரசும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமும் இணைந்து இந்த முயற்சியை எடுத்துள்ளனர்.

மிசோரமில்புதிய பறக்கும் கெக்கோ இனமானதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 • மிசோரம் பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் பயாலஜி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள்மிசோரமில் புதிய வகை பறக்கும் கெக்கோவைகண்டுபிடித்துள்ளனர்
 • மிசோரம் மாநிலத்தின் பெயரால் இந்த புதிய இனத்திற்குகெக்கோ மிசோரமென்சிஸ்என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த உயிரியானது மரங்களில் வாழக்கூடிய சுமார் 20 செ.மீ நீளம் கொண்ட புதிய இனம் என் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நியமனங்கள்

சிசிஐ தலைவராகரவ்னீத் கவுரைமத்திய அரசு நியமித்துள்ளது.

 • அக்டோபர் 2022 இல் அசோக் குமார் குப்தா வெளியேறியதில் இருந்து கடந்த ஏழு மாதங்களாக CCI யில் முழு நேரத் தலைவர் இல்லாதநிலையில் இந்திய போட்டி ஆணையத்தின் (சிசிஐ) தலைவராகரவ்னீத் கவுரைமத்திய அரசாங்கம் நியமித்துள்ளது.  
 • இந்த நியமனம் மூலம் CCI-ன்  அதிகாரம் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டு, பணியினை மேம்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாக CCI நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொல்லியல் ஆய்வுகள்

வெம்பக்கோட்டையில் நடத்தப்பட்ட அகழாய்வில் யானை தந்தத்தால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு.

 • வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை சுடுமண் வணிக முத்திரை, சுடுமண் புகைப் பிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்புநாணயம், கண்ணாடி மணிகள் மற்றும் சுடுமண் காதணி உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
 • இந்நிலையில் 3.9 செமீ நீளம், 1.4 செமீ அகலம், 191 மி. கிராம் எடையுள்ளயானை தந்தத்தால் ஆன பகடைக்காய் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய கலைநியமிக்க சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சோழர் கால படையால் கட்டப்பட்ட சிவன் கோவில் கண்டுபிடிப்பு.

 • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் சோழர் படையால் கட்டப்பட்ட அழகிய சிவன் கோயிலை தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர் வி. சிவரஞ்சனி கண்டுபிடித்துள்ளார்.
 • சோழர்களின்வேலைக்கார மூன்றுகைஎன்ற பிரிவு ராணுவத்தால் பெருங்கருணையில் சிவன் கோவில் கட்டப்பட்டதை இந்த அகழ்வாய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விருதுகள் 

ஆகாஷ்வானி கௌவ்ஹாத்திக்கு தேசிய நீர் விருதுகள் 2022 இல் 2வது இடம்.

 • ஆகாஷ்வானி கௌவ்ஹாத்திக்கு பிராந்திய செய்திப் பிரிவுக்கு கூட்டாக தேசிய நீர் விருதுகள், 2022  பட்டியலில் சிறந்த ஊடகப் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
 • பிராந்திய செய்திப் பிரிவுக்கு இந்த மதிப்புமிக்க விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த பேச்சு வார்த்தை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தியதால் இந்த விருதுக்கு இது தகுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி செய்திகள்

HDFC – இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 • ஹெச்டிஎஃப்சி வங்கியின் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமானது (ஏஎம்சி), இந்தியாவில் முதல் முறையாக பாதுகாப்பு துறை சம்பத்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • நிகர சொத்துக்களில் குறைந்தபட்சம் 80% பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த துறைகளின் நிறுவனங்களில் முதலீடு செய்யம் வகையில் இந்த திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளதாக HDFC தெரிவித்துள்ளது.

இரங்கல் செய்திகள்

உத்திரப் பிரதேச முன்னாள் அமைச்சர்ஹரி சங்கர் திவாரிகாலமானார்

 • கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான ஹரி சங்கர் திவாரி (89), மே 16 அன்று இரவு உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள அவரது வீட்டில் உடல்நல குறைவால் காலமானார்.
 • இவர் உத்திரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரின்சில்லுபர் சட்டமன்றத் தொகுதியில்தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!