UPSC NDA & NA (I) 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவு வெளியீடு!

0
UPSC NDA & NA (I) 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவு வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது NDA & NA (I) 2023 தேர்வுகளுக்கான முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (17.05.2023) வெளியிடப்பட்டுள்ளது.

UPSC NDA & NA (I) 2023 தேர்வு முடிவுகள்:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது 2023 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள 151st Course, 113th Indian Navy Academy Course குறித்த அறிவிப்பை 21.12.2022 அன்று வெளியிட்டது. Army, Navy, Air Force ஆகிய துறைகளில் இப்பயிற்சிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 395 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் UPSC NDA & NA (I) தேர்வு மற்றும் SSB Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இனி பெண்களுக்கு கோவில்களில் கடுமையாகும் ஆடை கட்டுப்பாடு – மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!

இப்பயிற்சிகளுக்கான முதற் கட்ட தேர்வு திட்டமிட்டபடி 16.04.2023 அன்று நடத்தப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான முடிவுகள் UPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in -ல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு முறையான SSB Interview நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையம் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த முழு விவரங்கள் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.

தேர்வு முடிவை பெறும் வழிமுறைகள்:
  • https://www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செலவும்.
  • முகப்பு பக்கத்தில் Examination Result என்பதை கிளிக் செய்யவும்.
  • பின் தோன்றும் பக்கத்தில் Examination Final Results என்பதை click செய்யவும்
  • பிறகு National Defence Academy and Naval Academy Examination (II), 2022 என்பதை கிளிக் செய்து PDF-ஐ பதிவிறக்கம் செய்து தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
Download UPSC NDA & NA (I) 2023 Exam Result 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!