நடப்பு நிகழ்வுகள் – 13 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 13 மே 2023
நடப்பு நிகழ்வுகள் – 13 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 13 மே 2023

தேசிய செய்திகள்

வாரணாசி விமான நிலையத்தில் இந்தியாவின் முதல் இலவச வாசிப்பு ஓய்வறை அறிமுகம்.
 • வாரணாசி லால் பகதூர் சாஸ்திரி இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் இந்தியாவின் முதல் இலவச வாசிப்பு ஓய்வறையை நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவால் அமைக்கப்பட்டுள்ளது . இதனை .பி முதல்வரின் ஆலோசகர் அவனிஷ் கே அவஸ்தி திறந்து வைத்தார்.
 • வாரணாசி விமான நிலையத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பயணிகள் இதில் உள்ள புத்தகங்களை இலவசமாகப் படிக்கலாம் என்று அவனிஷ் கே தெரிவித்துள்ளார்.
ICMR மற்றும் ஆயுஷ் அமைச்சகமானது ஒருங்கிணைந்த மருத்துவத் துறையினை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
 • ICMR மற்றும் ஆயுஷ் அமைச்சகமானது ஒருங்கிணைந்த மருத்துவத் துறையினை மேம்படுத்துவது மற்றும் சுகாதார ஆராய்ச்சியில் கூட்டு மற்றும் கூட்டுறவு வேகத்தினை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
 • பாரம்பரிய அறிவை நவீன ஆராய்ச்சியுடன் இணைத்து மற்றும் ஆயுர்வேதத்தை அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் அதனை மேம்படுத்துவதில் இந்த ஒப்பந்தமானது ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவ பிரதிபாசமையல்என்ற போட்டியானது MyGovஆல் தொடங்கப்பட்டுள்ளது.
 • MyGov மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஆகியவை இணைந்து இந்தியாவின் வளமான சமையல் பாரம்பரியத்தைப் பாதுகாக்கயுவ பிரதிபாசமையல்என்ற நிகழ்ச்சியை தொடங்குகின்றன.
 • தினையின் உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிப்பதற்கும் மற்றும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த நிகழ்ச்சியானது நோக்கமாக கொண்டுள்ளது.

“ஓபன் சேலஞ்ச் ப்ரோக்ராம் (OCP) 2.0” என்ற திட்டத்தை RINL அறிமுகப்படுத்தியுள்ளது.
 • RINL-யால்  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியான அதுல் பட், ஆன்லைனில்ஓபன் சேலஞ்ச் ப்ரோக்ராம் (OCP) 2.0″ அறிமுகப்படுத்தியுள்ளார். (ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட்விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய அரசின் ஸ்டீல் அமைச்சகத்தின் உரிமையின் கீழ் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.)
 • இந்த நிகழ்ச்சியானதுகல்பதரு-CoE” (தொழில்முனைவோர் மையம்) மூலம் தொடங்கப்படும் OCP திட்டங்களின் தொடரில் இந்த திட்டம் இரண்டாவது திட்டமாகும் . இந்த ஓப்பன் சேலஞ்ச் திட்டமானது, “தொழில்துறை 4.0″ பிரிவின் கீழ் தொழில்நுட்பத் துறையில் உள்ள ஸ்டார்ட்அப்களைத் தேர்ந்தெடுப்பதற்கானதாகும்

சர்வதேச செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான“இந்தியப் பெருங்கடல் மாநாட்டை(ஐஓசி)” பங்களாதேஷ் நடத்த திட்டமிட்டுள்ளது.
 • 6வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டை வரும் மே 12 முதல் 13 வரை பங்களாதேஷில் உள்ள டாக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்த மாநாட்டை தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்தியப் பெருங்கடலில் உள்ள பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவதையும் குறித்த முக்கிய அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

செழிப்புஎன்று பெயரிடப்பட்ட இயற்கை உரத்தை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 • ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான இயற்கை உரத்திற்குசெழிப்புஎன பெயரிட்டு அதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின்.
 • இந்த உரமானது தழை, சாம்பல் சத்து மற்றும் மண்ணின் தரத்தினை மேம்படுத்துவதற்கான சில இயற்கை பொருட்கள் ஆகியவற்றினை கொண்டு தயாரிக்கப்பட்டது மற்றும் இந்ததரமான இயற்கை உரத்தை நுகர்வோருக்கு அளிக்கும்பொருட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இது  மே12 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தின் காந்திநகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலானவளர்ச்சித் திட்டங்களைபிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
 • 4,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு குஜராத்தில் உள்ள காந்திநகரில் கடந்த மே 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
 • விரைவான நகரமயமாக்கலால் ஏற்படும் சவால்கள் மாறும் பாதிப்புகள் குறித்துப் பேசிய பிரதமர் இந்த திட்டத்தின் மூலம் அவற்றை எளிதாக களைய முடியும் என்றார்.

“கடல் ஹாரியர் அருங்காட்சியகத்தை” விசாகப்பட்டினத்தில் ஆந்திர முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
 • விசாகப்பட்டினம் பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தால் (விஎம்ஆர்டிஏ)ஆர்கே கடற்கரை சாலையில் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மே 11 அன்று மாலை  திறந்து வைத்துள்ளார்.
 • இந்த புதிய அருங்காட்சியகத்தில் 2016 இல் செயலிழந்த ஹாரியர் விமானத்தை கோவாவிலிருந்து  விசாகப்பட்டின பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (விஎம்ஆர்டிஏ) கொண்டு வந்து காட்சிப்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் விமானநிலையமானதுஉலகின் மிக சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையமாகஉருவெடுத்துள்ளது.
 • விமானப் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான சிரியம், சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, GMR ஹைதராபாத் சர்வதேச விமான நிலையமானது 90.43 சதவீத ஆன்டைம் செயல்திறனைப் பெற்று உலகின் மிக சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம் என்ற பட்டத்தை பெற்றுள்ளது.
 • மேலும் ஹைதராபாத் விமான நிலையமானதுஉலகளாவிய விமான நிலையங்கள்மற்றும்பெரிய விமான நிலையங்கள்என இரண்டு பிரிவுகளின் கீழ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் அரசங்கமானது “ஆயுஷ்மான் அசோம் – முக்ய மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இந்த ஆயுஷ்மான் அசோம்முக்யா மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனாவானது  “அணுகக்கூடிய மற்றும் மலிவு சுகாதாரத்தை மேம்படுத்துவதைநோக்கமாகக் கொண்ட சுகாதார உத்தரவாதத் திட்டமாகும்.
 • அஸ்ஸாமின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையின் முன்முயற்சியின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் குறிப்பிட்டுள்ளவர்கள் இதில் பயனடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நியமனங்கள்

NIIFL யின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜீவ் தார் நியமனம்.
 • நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட் லிமிடெட்டானது (NIIFL) மே 11 முதல் இடைக்கால அடிப்படையில் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகராஜீவ் தாரைநியமித்துள்ளது.
 • நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு முதல், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்த சுஜாய் போஸ் தனது  தற்போதைய பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு  கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் இந்தியாவின் முதல் வானியல் கழகத்தின் “கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதை” பெற்றுள்ளார்.
 • இந்தியாவின் வானியல் சங்கமானது (ASI) புனேவில் இந்தியாவின் வானியல் மற்றும் வானியற்பியல் துறையில் விஷ்ணு நர்லிகர் செய்த பங்களிப்புகளுக்காக இந்த கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது.
 • இந்திய வானொலி வானியலின் தந்தையாகக் கருதப்படும் கோவிந்த் ஸ்வரூப்பின் (1929-2020) நினைவாக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.

விருதுகள்

ISSF உலகக் கோப்பை 2023 இல் ஏர் பிஸ்டல் பிரிவில்  இந்தியாவின் சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா டிஎஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
 • மே11 அன்று அஜர்பைஜானின் பாகுவில் நடைப்பெற்ற ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கான ISSF உலகக் கோப்பை 2023 இல் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களான சரப்ஜோத் மற்றும் திவ்யா இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவின் கீழ்  தங்கம் வென்றனர்.
 • இதே போட்டியில்  “ரிதம் சங்வான்” 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தனி நபர் பிரிவின் கீழ் வெண்கலம் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

தேசிய ஓடோமீட்டர் தினம்
 • தாமஸ் சவேரி என்பவரால் ஓடோமீட்டர் கண்டுபிடிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஓடோமீட்டர் தினமானது மே 12 அன்று கொண்டாடப்படுகிறது.
 • இந்த ஓடோமீட்டரானது முதலில் தாமஸ் சவேரி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, பெஞ்சமின் பிராங்கிளின் அவர்களால் முழுமைப்படுத்தப்பட்டது என்பது இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!