
2025 ஆம் ஆண்டின் CUET நுழைவுத் தேர்வு தேதிகள் வெளியீடு…!! தேசிய தேர்வுகள் முகமை அதிரடி அறிவிப்பு…!!
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர ‘CUET’ தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த CUET நுழைவு தேர்வானது தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான CUET நுழைவு தேர்வு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
TN SET Exam Hall Ticket 2025 Out – Steps to Download Admit Card
அதாவது, “முதுநிலை படிப்புகளுக்கான CUET நுழைவு தேர்வு வருகிற மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக” அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள மாணவர்கள் http://www.nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட” அறிவுறுத்தப்பட்டுள்ளது.


























