TN SET Exam Hall Ticket 2025 Out- Steps to Download Admit Card
தமிழ்நாடு ஆசிரியர் கழகத்தால் (TRB) தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணிக்கான மாநில தகுதி தேர்வு ‘TNSET’ ஆனது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான SET தேர்வை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான TNSET தேர்வு வருகிற மார்ச் மாதம் 6, 7, 8, மற்றும் 9 ஆகிய நான்கு தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை தமிழ்நாடு ஆசிரியர் கழகத்தின் (TN TRB) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த நுழைவு சீட்டை பதிவிறக்கம் வழிமுறைகளை கீழே காணலாம்.
How to Download TNTET Hall Ticket 2025:
- முதலில், TN TRB ன் https://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
- அதன் முகப்பு பக்கத்தில் இருக்கும் ‘TN SET HALL TICKET’ என்ற குறிப்பில் உள்நுழையவும்.
- தங்களுடைய தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
- பின்பு, சமர்ப்பித்த உடன், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் குறிப்பை அழுத்தவும்.
- அதை, ஒளி நகல் (Xerox Copy) எடுத்து வைத்து கொண்டு தேர்வுக்கு கட்டாயம் எடுத்து செல்லவும்.


























