தமிழ்நாட்டில் அரிசி விலை திடீர் குறைவு…!! அரிசி வணிகர் சங்கங்களின் தலைவர் அதிரடி அறிவிப்பு…!!
இந்திய உணவு கழகத்திடம் இருந்து வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு, தேவையான அரிசியை கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி, தற்போது அதிக அரிசி கொள்முதல் காரணமாக, அரிசியின் இருப்பு அதிகமானதால் விலையை குறைத்துள்ளதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி வணிகர் சங்கங்களின் தலைவர் துளசிங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
SEBI இன் புதிய தலைவராக பதவியேற்கிறார் முன்னாள் நிதிச் செயலாளர்.. நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்..
மேலும், தமிழ்நாட்டில் அரிசி ரகம் 1638, சன்னம், மிக சன்னம் மற்றும் பிபிடி ஆகிய அரிசி ரகங்கள் கிலோவுக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த அரிசி ரகங்களின் சில்லறை விற்பனை கிலோவுக்கு ரூ. 1 லிருந்து ரூ. 1.50 வரை குறைக்க பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.மேலும், இந்த அரிசி விலை குறைவானது அடுத்த 6 மாதங்களுக்கு தமிழ்நாட்டில் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



























