பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறப்பு? ஹரியானா முதல்வர் தகவல்!
கொரோனா புதிய வழக்குகள் அதிகரித்து வராத பட்சத்தில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மீண்டுமாக திறப்பது குறித்த ஆலோசனையில் ஹரியானா அரசு ஈடுபட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் மெதுவாக மறைய துவங்கியுள்ளது. இந்த சரிவை தொடர்ந்து ஹரியானா மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. அந்த வகையில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு தளர்வுகளின் இறுதி கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றை மீண்டும் திறப்பது குறித்த முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஞ்சலி குழந்தையை கலைக்க சொல்லும் டாக்டர் – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!
ஆனால் இது தொடர்பாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறுகையில், கடுமையான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, ‘ஹரியானாவில் இப்போதைக்கு கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதை கவனத்தில் கொண்டு வரும் காலங்களில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் விரைவில் திறக்கப்பட வேண்டும்’ என்று ஒரு ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
மேலும் ஹரியானாவில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்துவது தொடர்பான கூட்டத்தில், வரும் 2025 ஆண்டுக்குள் கல்விக்கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது என்று கூறிய அவர் அதே நேரத்தில், ஹரியானாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிறநாட்டு மொழிகளை கற்றுக்கொடுக்கும் ஒரு பள்ளியைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், பின்னாளில் தேவைக்கேற்ப இந்த பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.